பெரியகுளம் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் திருவிழா துவக்கம் - இரவு கண் விழித்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு!!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதான பட்டியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மேலும் இந்த கோயில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தக் கோயிலில் வருடா வருடம் மகா சிவராத்திரி அன்று இரவு திருவிழா துவங்கி 8 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த மாதம் ஜனவரி 25ஆம் தேதி திருவிழாவுக்கான கோயில் கொடியேற்றம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று மாசி மகா சிவராத்திரி முதல் தொடங்கி வருகிற 22 ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு திருவிழா நடைபெற உள்ளது. தனக்கு எது குலதெய்வம் என தெரியாத பக்தர்கள் இந்த கோயிலை குலதெய்வமாக வழிபடுவது வழக்கம்.
தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.


கருத்துகள்
கருத்துரையிடுக