விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாநிலம் தழுவிய பட்டினி போராட்டம்!!

தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் மாநிலம் தழுவிய பட்டினி போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் மாநிலம் தழுவிய பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மாநில பொருளாளர் தயாளன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் கிருஷ்ணாபாய் வரவேற்று பேசினார். நிர்வாகிகள் செந்தில், பிரேம்குமார், செந்தில்குமார் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!