கோவை கவுண்டம்பாளையம் பகுதியில், மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி எனும், பிரீமியம் வீட்டு மனை திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சி!!

கோவை கவுண்டம்பாளையம் பி அன்ட் டி காலனி பகுதியில், நியூ கோவை ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில், மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி எனும் பிரீமியம் வீட்டு மனை திட்டத்தின் துவக்க விழா  நடைபெற்றது.

இத்திட்டத்தை சக்தி நிறுவன  குழுமங்களின் தலைவர் மாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மேலும், யுனிவர்சல் ரேடியேட்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் மாதவன்  இவ்விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் அப்பொழுது அவர் கூறியதாவது.. 

தமிழ்நாட்டின் முன்னணி தொழில் முன்னோடிகளில் ஒருவரான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தால் தொடங்கப்பட்ட சக்தி குழுமம், சர்க்கரை, ஜவுளி, போக்குவரத்து, நிதி, காபி எஸ்டேட், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு  வணிகங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி வீட்டு மனைகள், தற்போது அறிமுகம் செய்யபட்டுள்ளது, இந்த இடமானது மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து 1.3 கிலோமீட்டர் தூரத்திலும், தடாகம் சாலையிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என்றார். இங்கு  சிறுவாணி குடிநீர் வசதி, தார்சாலை, தெருவிளக்குகள், இயற்கை சூழல், அடித்தள வடிகால் அமைப்பு, சுற்றுச்சுவர், மேம்படுத்தப்பட்ட பூங்கா, பிக்கிள்பால் மைதானம், நடைபாதை உள்ளிட்ட பல நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நகரமைப்பு திட்ட ஒப்புதல் மற்றும் நில ஆவண ஒழுங்குமுறை அங்கீகாரம் பெற்ற திட்டமாகவும், வாஸ்து முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட வீட்டு மனை பகுதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது என்றார். இங்கு மொத்தமாக 53 வீட்டு மனைகள் கொண்ட இத்திட்டத்தில், பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலில், நவீன வசதிகளுடன் குடியிருப்பதற்கான அடித்தளம் அமைந்துள்ளதாக தெரிவித்தார்  விழாவில், பவுண்டேஷன் ஒன் குழுமத்தின் தலைமை பொறுப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!