செம்மை மாதர் தொழில் முனைவோர் பயிற்சி!!
செம்மைமாதர் பெரியகுளம் தோட்டக்கலைத்துறை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் நடத்திய, செம்மை மாதர் என்ற தலைப்பில் பெண்களுக்கான மூன்று நாட்கள் தொழில் முனைவு பயிற்சியின் நிறைவு நாளில் கலந்துகொண்டு, பயிற்சி பெற்ற பெண்களின் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்
இந்தப் பயிற்சியில் மொத்தம் 55 பெண்கள் கலந்து கொண்டு, உணவுத் தொழிலை துவங்குவதற்கான முழுமையான பயிற்சியை பெற்றுள்ளனர். அவர்கள் விரைவில் தங்களது சொந்த உணவுத் தொழில்களை தொடங்க தயாராக உள்ளனர்.இந்
நிகழ்வின் ஒரு பகுதியாக, பயிற்சி பெற்ற பெண்கள் தயாரித்த மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல், ஏற்கனவே இதே மையத்தில் பயிற்சி பெற்று இன்று வெற்றிகரமான தொழில் முனைவோராக செயல்பட்டு வரும் பெண்களும் தங்களது ஸ்டால்களை அமைத்து, புதியவர்களுக்கு ஊக்கமளித்தனர்.
வீட்டிலிருந்தபடியே வருவாயை ஈட்டவும், சமூகத்தில் ஒரு மதிப்புமிக்க தொழில் அதிபராக பெண்கள் உருவெடுக்கவும், இங்கு வழங்கப்படும் இந்தப் பயிற்சிகள் மிகுந்த உதவியாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் உள்ளன. இந்த அருமையான வாய்ப்பை உருவாக்கிய பெரியகுளம் தோட்டக்கலைத்துறை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் பாராட்டுக்குரிய செயலாகும்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக