புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முன்னாள் அமைச்சர்‌. விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்தார்!!


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அறந்தாங்கி வ.உ.சி திடலில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் எதிர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவினர் ஓட்டு கேட்டு வருவாங்க அப்போது அவங்ககிட்ட 3 கேள்விகள் கேளுங்கள்,முதலாவதாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை ஆண்டுகளில் உரிமை தொகை வழங்கியது, எதிர் வருகின்ற 3 மாதங்களுக்கு உரிமை தொகை வருமா, மூன்று ஆண்டுகளில் பாக்கி உள்ள உரிமை தொகை 1 லட்சத்தை எப்ப தருவீங்க என்று கேளுங்கள் என்றார். அப்படி ஒரு லட்சம் பாக்கியை தந்துவிட்டால் திமுகவிற்கு வாக்களியுங்கள், தராவிட்டால் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என பேசினார். முன்னதாக எம்ஜிஆர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவியாக தையல் மெஷின் மிக்ஸி சேலை சில்வர் டப்பா உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராஜநாயகம், ஒன்றிய செயலாளர்கள் பெரியசாமி, வேலாயுதம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!