தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் நத்தம் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கபாணி பேச்சு!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் தமிழ்நாடு தலை குனியாது பொதுக் கூட்டம் நத்தத்தில் நடந்தது. ஒன்றியச் செயலர்கள் சேக்சிக்கந்தர் பாட்சா, பழனிச்சாமி, ரத்தினக்குமார், தர்மராஜன், மோகன், ஜான் பீட்டர், ஜெயராமன், நகரச் செயலர் ராஜ்மோகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வந்திருந்த அனைவரையும் மாவட்ட பொருளாளர் விஜயன் வரவேற்றார். கூட்டத்தில் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் பேசினார். முன்னதாக தலைமை வகித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொடுத்த வாக்குறுதிகளான கொரோனாக் கால நிவாரண உதவித் தொகையாக ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் வீதம் 2 கோடியே 30 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட்டது. மகளிர் விடியல் பயணம், இன்னுயிர் 48, இல்லம் தேடிக் கல்வி, உள்ளிட்ட வாக்குறுதி, 1.5 லட்சம் விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்புகள் போன்றவைகளை நிறைவேற்றியதுடன் சொல்லாத வாக்குறுதிகளான மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற உயர் கல்வி பயில மாணவிகளுக்கு புதுமைப் பெண், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் ரூ. ஆயிரம் வழங்கும் திட்டம், அன்புக்கரங்கள், 65 வயதுக்கு மேலுள்ளவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களது குடும்ப அட்டைகளுக்கு வீடு தேடிச் சென்று பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டம். என இப்படி கட்சி, மதம், இனம் வேறுபாடின்றி எல்லாருக்கும் எல்லாம் என்ற வகையில் திட்டங்களை தீட்டி நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சி செய்து வருகிறார். குறிப்பாக நத்தம் தொகுதியை பொருத்த வரையில் தங்களின் நீண்ட கால கோரிக்கையான அரசு கலைக்கல்லூரி யை கொண்டு வரப்பட்டுள்ளது. கல்லூரிக்காக பேரூராட்சி தலைவர் தானமாக வழங்கிய இடத்தில் கல்லூரிக்கு புதிய கட்டிடங்கள் கட்ட ரூ. 18 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது. மேலும் மின்மயானம், குப்பைக் கிடங்கு இடமாற்றம், அறிவுசார் மையம் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகள் அதிகம் உள்ளது நத்தம் தொகுதியாகும். முதியோர் உதவித் தொகைக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு வரும் 4ம் தேதி முதல் கிடைக்கும். மேலும் நமது முதல்வர் அவர்கள் உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற வகையில் கருத்துக்கள் கேட்கப்பட்டு அவைகள் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். எனவே வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நத்தம் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிப்பவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, முதல்வராக ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவை தாருங்கள் என்று பேசினார்.
இதில் மாவட்ட, நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நத்தம், சாணார்பட்டி, திண்டுக்கல் ஒன்றியங்கள், பேரூர் திமுக நிர்வாகிகள் சார்பு அணியினர், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொண்டனர். மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர். சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக