ராணிப்பேட்டையில் சிறுபான்மை மக்கள் நலக் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறுபான்மை மக்கள் நலக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் தேசிய தலைவர் பேராயர் சாம் ஏசுதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது . உடன் மாநில மகளிர் அணி தலைவி சகோதரி தயா மலர் ஸ்டீபன், தலைமை நிலைய செயலாளர் ஜோசப் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் போதகர் பால் உள்ளிட்டவர்கள் பங்கேற்று வீடு வாசல் இல்லாமல் தவிக்கிற ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கு.

தலித் மக்களுக்கு சொந்தமான 12 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை அவர்களுக்கே வழங்குக.

சாலை வசதி இல்லாததால் ராணிப்பேட்டையில் தொழில்களில் அபிவிருத்தி இல்லை குடிநீர் குழாய்கள் இல்லை பொதுமக்களுக்கு இந்த அடிப்படை வசதிகளை கூட செய்து தராத ராணிப்பேட்டை நகராட்சியை சிறுபான்மை மக்கள் நலக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது .

தோல் பதனிடம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறுகிற ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் சீர்கெட்டு போய் உள்ளது சுத்தமான குடிநீர் நல்ல விவசாயம் போன்ற அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து கொடு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட மகளிர் அணி தலைவி மீரா ராஜேந்திரன் நன்றி கூறினார் மேலும் இதில் ஏராளமான பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!