தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பண்ருட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி!!
கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பண்ருட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க,ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர். திருமாவளவன் நகர மன்ற உறுப்பினர்கள். சண்முகவள்ளி பழனி, முகமது அனிபா, கிருஷ்ணராஜ், கலைவாணி மதியழகன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் லோகநாதன், வார்டு செயலாளர். முருகன், நகர இளைஞர் அமைப்பாளர். சம்பத் , துணை அமைப்பாளர்கள். ராஜா, வட்ட பிரதிநிதி. ராஜி, தேசிய மாணவர் படை முனைவர். ராஜா நன்றி தெரிவித்தார் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக