நல்லகண்ணு கடந்து வந்த பாதை மறைந்தார் நல்லகண்ணு!!
1. *தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ம் ஆண்டு பிறந்தார் நல்லகண்ணு.*
2. *18 வயதில் இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து ஏழை எளிய, தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைக்காக போராடியவர்.*
3. *மகாத்மா காந்தியின் அறைகூவலை ஏற்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தி சிறை சென்றவர்.*
4. *1992 முதல் 2005 வரை 13 ஆண்டுகால இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக இருந்தார்.*
5. *சிறுவயதிலேயே ஆர்வத்துடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். தனது வாழ்நாளின் பெரும் பகுதியைப் போராட்டங்கள் மற்றும் சிறையில் கழித்தவர்.*
6. *விடுதலைப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு, கனிமவள கொள்ளைக்கு எதிரான பல போராட்டங்களில் ஈடுபட்டவர்*
7. *80 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவுடமைக் கொள்கையுடன் பயணித்தவர்.*
8. *உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற போராட்டத்தை தமிழ்நாட்டில் முன்னின்று நடத்தியவர்.*
9. *மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களின் விவரத்தை தொகுத்து நூலாக வெளியிட்டவர்.*
10. *தனது 80வது பிறந்தநாளையொட்டி கட்சி வசூலித்து 10 கொடுத்த ரூ.1 கோடியை கட்சிக்கே திருப்பிக் கொடுத்தவர்.*
11. *2022ல் தகைசால் தமிழர் விருதுடன் அரசு வழங்கிய 11 ரூ.10 லட்சத்துடன் ரூ.5000-ஐ சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திருப்பிக் கொடுத்தவர்.*
12. *நல்லகண்ணுவின் உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது!*
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக