அரக்கோணம் மயான உற்சவ பக்தர்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னதானம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக அரசியல் களத்தில் மூன்றாம் அணியாக உருவெடுத்து வரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் நடிகர் விஜய் தலைமையில் வெற்றி நடை போட்டு வருகிறது. அக்கட்சியின் சார்பில் அரக்கோணம் நகரத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நிறைவேற்றி வருகின்றனர் அந்த வரிசையில் பிரசித்தி பெற்ற மயான கொள்ளை உற்சவத்திற்கு குவிந்த
பல்லாயிர கணக்கான பக்தர்கள் கூட்டத்தில் ஐந்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கபட்டது இதற்கு ஏற்பாடு செய்த நகர செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக ராணிபேட்டை மாவட்ட செயலாளரும், நகர மன்ற உறுப்பினருமான காந்தி ராஜ் பங்கேற்று அன்னதானம் தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பிற அணி நிர்வாகிகள் மகளீர் பலரும் அன்னதானம் வழங்கினார்கள் இது போன்று பல ஆன்மீக பக்தர்களும் பல்வேறு தானங்களில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக