ராணிப்பேட்டையில் திராவிடர் கழகம் சார்பில் பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வு திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் திராவிடர் கழகம் சார்பில் பாராமெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவரணி தலைவர் அறிவு மணி தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர். லோகநாதன், மாவட்ட செயலாளர் கோபி திராவிடர் கழக மகளிர் அணி தலைவி. புவனேஸ்வரி தேவராஜன் திராவிடர் கழக மகளிர் பாசறை சுசிலா வெங்கடேசன் ராமு, ஆகியோர் முன்னிலை வகித்தனர் . ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசியவர் திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர். பொன் வெங்கடேசன்,
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றியவர்கள்:
திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர். எல்லப்பன், திமுக தலைமை கழக பேச்சாளர். பா புகழேந்தி. ராணிப்பேட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவருமான ரமேஷ் கர்ணா, மாநில துணை செயலாளர். பெல் சேகர் , மண்டல செயலாளர். சோ தமிழ் , மதிமுக மாவட்ட செயலாளர். பி என் உதயகுமார், ஒன்றிய செயலாளர். ஆறுமுகம் , கம்யூனிஸ்ட் கட்சி எல். சி. மணி அறப்பாக்கம் சின்னதுரை. நன்றியுரை :மாவட்டத் துணைச் செயலாளர் அரக்கோணம் பெரியார் நேசன் மற்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக