ஆண்டிபட்டி அருகே ஏத்த கோவில் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா!!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஏத்த கோவில் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கள்ளர்பள்ளிமேற்பார்வையாளர்.ரதிதேவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.
மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியை சீத்தாலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும் பொதுமக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.




கருத்துகள்
கருத்துரையிடுக