குளமங்கலம் ஸ்ரீ பெருங்காரையடி மிண்ட அய்யனார் திருக்கோவில் நடைபெற்ற மாசி மகத் திருவிழா!

 புதுக்கோட்டை மாவட்டம், குளமங்கலத்தில் வில்லுணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில், ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலைக்கு (33 அடி உயரம்) புகழ்பெற்றது. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான இக்கோவிலில் மாசிமகத் திருவிழா 02.03.2026,03.03.2026 திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை

 ஆகிய இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது திருவிழாவை முன்னிட்டு பந்தகால் முகூர்த்தம் வெகு சிறப்பாக நடைபெற்றன.

 இக்கோவிலின் சிறப்பு  திங்கள், வெள்ளிக்கிழமை வழிபாடுகள் மிகவும் சிறப்பானவை. 

சிறப்பம்சங்கள்

பெரிய குதிரை சிலை: கோவிலின் நுழைவாயிலில் 33-35 அடி உயரமுள்ள பிரம்மாண்ட குதிரை சிலை உள்ளது, இது ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலையாகக் கருதப்படுகிறது.

தல வரலாறு ஆற்றங்கரையில் கிடைத்த அய்யனார் சிலை, மீண்டும் அதே ஆற்றங்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் பெருங்காரையடி மிண்ட அய்யனார்' என அழைக்கப்படுகிறார்.

திருவிழா மாசி மாதத்தில் நடைபெறும் மாசி மகத் திருவிழாவில் குதிரை சிலைக்கு ராட்சத மாலை அணிவித்து வழிபாடு செய்யப்படுகிறது.

அமைவிடம் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், குளமங்கலம் கிராமத்தில் வில்லுணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 

இக்கோவில் அப்பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும், கலைநயமிக்க சிற்பங்களைக் கொண்ட இடமாகவும் விளங்குகிறது.

 பந்தல்கால் முகூர்த்த விழாவில் எ. லோகநாதன், மு, சின்னத்தம்பி,  எம். ரஞ்சித் குமார்  கே பவானந்தம், ஜே. தியாகராஜன், ஆர் தயாளன், ஆர் புஷ்பராஜ், முருகானந்தம், ஆர் அருள், ஏ.கார்த்திக், என். ரத்தினவேல், சி. பன்னீர்செல்வம், ஜே. பாரதி, ஆர் நாகராஜன், ஏ தமிழ்மணி, எஸ் சிவராஜ், ஏ.காமராஜ் ராஜு, எம்.ராஜன், சி பாலு, மற்றும் முக்கிய நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பந்தக்கால் முகூர்த்தத்தை சிறப்பாக நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!