கல்வி சுற்றுலாவில் பங்கேற்கும் மதர் தெரசா வேளாண்மை கல்லூரி மாணவர்கள்!!


புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் மதர் தெரசா வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு வேளாண்மை மாணவர்கள் 09.02.2026 முதல் 26.02.2026 வரை நடைபெற்று வரும் அகில இந்திய கல்விச் சுற்றுலாவில் பங்கேற்று வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக 19.02.2026 அன்று மாணவர்கள் ஹிமாச்சல் பிரதேசத்தில் அமைந்துள்ள Central Potato Research Institute (ICAR–CPRI) நிறுவனத்தைப் பார்வையிட்டனர். அங்கு மூத்த வேளாண் விஞ்ஞானி முனைவர் அஸ்வானி குமார் ஷர்மா அவர்கள், மையத்தின் நோக்கங்கள், செயல்பாடுகள், மேம்பட்ட உருளைக்கிழங்கு வகைகள் உருவாக்கம், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

இந்த ஆராய்ச்சி மையத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மரபியல் வகைகள் (genotypes) பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வகைகள் புதிய இன மேம்பாடு மற்றும் எதிர்கால ஆராய்ச்சிகளுக்கான முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன.  தற்போது குறுகிய காலத்தில் அறுவடைக்கு தயாராகும் ஆரம்ப வளர்ச்சி (early maturing) உருளைக்கிழங்கு வகைகள் உருவாக்கத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.மேலும், இந்நிறுவனத்தின் பிராந்திய ஆய்வு நிலையம் உதகமண்டலம் (ஊட்டி) பகுதியில் செயல்பட்டு வருகிறது.

மேலும், ஆய்வகங்கள் மற்றும் தாவரவியல் பரிசோதனைப் புலங்கள் வழியாக மாணவர்களுக்கு செய்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன. நவீன தொழில்நுட்பங்கள் பயிர் மேம்பாட்டில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் மாணவர்கள் நேரில் கண்டு அறிந்தனர்.

இந்த கல்விச் சுற்றுலா வாயிலாக மாணவர்கள் தேசிய அளவிலான ஆராய்ச்சி நிறுவனங்களின் செயல்முறைகள், விஞ்ஞானிகளின் பங்களிப்பு மற்றும் வேளாண் துறையின் புதுமையான முன்னேற்றங்கள் குறித்து ஆழமான புரிதலை பெற்றனர். இவ்வனுபவம், அவர்களின் தொழில்நுட்ப அறிவையும் ஆராய்ச்சி நோக்கத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!