நெமிலி அருகே சயனபுரம் முதல் பள்ளூர் வரை இணைப்புச்சாலை, தார்சாலை அமைக்கும் பணி! பெ. வடிவேலு ஆய்வு!!


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சயனபுரம் கிராமத்திலிருந்து பள்ளூர் வரை செல்லும் இணைப்புச் சாலை தற்போது மண்சாலையாக உள்ளது. இந்த சாலையை பொதுமக்களும், விவசாயிகளும், மாணவர்களும், பணிக்கு செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்த சாலையில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் விளை பொருட்கள், விவசாய உரங்கள், கொண்டு செல்லவும், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வரவும் இந்த சாலை பயன்படுகிறது. எனவே இந்த சாலையை தார் சாலையாக அமைத்து தரக்கோரி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், ஆர்.காந்தி அவர்களிடம் தார்சாலை அமைத்து தரக்கோரி, கோரிக்கை வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட செயற்பொறியாளர். செந்தில் குமார் அவர்கள் இந்த சாலையை ஆய்வு செய்தார். அப்போது 4 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலையை, ரூ.3 கோடி செலவில் அமைப்பதற்கான மதிப்பீட்டு பட்டியலை தயார் செய்தார்.

அப்போது, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு, சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர். பவானி வடிவேலு, நெமிலி ஒன்றிய பொறியாளர். செவ்வந்தி, பணி மேற்பார்வையாளர். பாலமுருகன், சாலை ஆய்வாளர். கார்திக், குமார், முகம்மது அப்துல் ரகுமான், லட்சுமிபதி, ஜெயவேல், கோவிந்தராஜி, கஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!