அரசு நிலம்… அதிகாரிகள் துணையுடன் கொள்ளை!!



கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம், மங்களூர் ஒன்றியம், போத்திரமங்கலம் ஊராட்சி கிழக்கு கொட்டாரம் சமத்துவபுரம் நகரில் அரசுக்கு சொந்தமான சர்வே எண் 33/2 நிலத்தை இளைஞர்கள் சீர் செய்து விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், அந்த நிலத்தை தனிநபர் ஒருவர் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து தன் பெயரில் பட்டா மாற்ற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனை கண்டித்து, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரும் மாநில ஆசிரியர் கூட்டமைப்பு இணைச் செயலாளருமானபெருஞ்சித்திரன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. மாவட்டபொருளாளர் சஞ்சய் காந்தி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.அரசு நிலத்தை காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!