மாற்றுத்திறனாளிகளை வதைக்கும் அரசு முகாம் - அதிகாரிகள் மீது சமூக ஆர்வலர்கள் கடும் கொதிப்பு!!


ராணிப்பேட்டை: வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம், அவர்களுக்கு உதவிகரமாக இருப்பதற்குப் பதில், பெரும் சித்ரவதையாக மாறியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் வருவார்கள் என்று தெரிந்தும், மிகச்சிறிய அளவிலான ஒரு இடத்தை முகாமிற்குத் தேர்வு செய்தது அதிகாரிகளின் அலட்சியத்தையே காட்டுகிறது. போதிய இடவசதி இன்றி, கைக்குழந்தைகளுடனும், சக்கர நாற்காலிகளுடனும் வந்தவர்கள் வெயிலிலும் கூட்ட நெரிசலிலும் சிக்கித் தவித்தனர். 

கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் நிலை உருவானது மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்குக் குடிநீர் வசதியோ, நிழற்கூடங்களோ அல்லது முறையான கழிப்பறை வசதிகளோ செய்து தரப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளை வெறும் எண்களாகப் பார்க்கிறதா அல்லது மனிதர்களாகப் பார்க்கிறதா? ஒரு மருத்துவமனை வளாகத்திலேயே மாற்றுத்திறனாளிகள் உடல்நலம் பாதிக்கப்படும் வகையில் இவ்வளவு மோசமான முறையில் முகாமை நடத்தியது கண்டிக்கத்தக்கது."

பகுதி வாரியான முகாம்கள்: ஒட்டுமொத்த மாவட்ட மக்களையும் ஒரே இடத்தில் குவித்து வதைக்காமல், அந்தந்த தாலுகா அல்லது ஊராட்சி வாரியாகச் சிறிய முகாம்களை நடத்த வேண்டும். போதுமான இடவசதி, காற்றோட்டம் மற்றும் நிழல் வசதி கொண்ட திருமண மண்டபங்கள் அல்லது பொது இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். டோக்கன் முறையைப் பின்பற்றி நீண்ட நேரக் காத்திருப்பைக் குறைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இனியாவது விழித்துக்கொண்டு, மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!