மூணாறு மாட்டுப்பட்டி எஸ்டேட் கிராம் ஸ்லாண்டில் பயணிகள் நிழற்குடை ,கவலைக்கிடமான நிலையில் குப்பைகளால் துர்நாற்றம்!!

இடுக்கி மாவட்டம்,மூணாறு அருகிலுள்ள கிராம்ஸ்லாண்ட் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள முக்கிய காத்திருப்பு நிலையம் தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. 

மழைக்காலங்களிலும்வெயில் காலங்களிலும் பொதுமக்கள் ஒதுங்கி நிற்க முடியாத சூழ்நிலை நிலவுவதுடன், முதியவர்கள் உட்காரும் வசதிகளும் இல்லாததால் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இந்த காத்திருப்பு நிலையம், மூணாறு–மாட்டுப்பட்டி சாலையில், பார்வதி அம்மன் கோவில்க்கு எதிர்ப்புறமாக அமைந்துள்ளது. 

ஆனால் பராமரிப்பு இல்லாமல், குப்பைகளால் சூழப்பட்டு சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

பொதுமக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தினமும் இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருவதால், அவர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். 

இதனால், சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, காத்திருப்பு நிலையத்தை சீரமைத்து, சுத்தம் செய்து, தேவையான இருக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!