பண்ருட்டியில் அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!!
பண்ருட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பூக்கடை சக்திவேல் தலைமை தாங்கினார். சங்கர், ஜெயக்குமார், நேரு வரவேற்றனர். முத்துராசா ரெட்டியார், ஜெயகாந்தன், தமிழ்மணி, நித்யாசங்கர், சித்ரா, வெங்கடேசன், பிரபாகரன் மோகன்பிரபு, சிற்றரசு, கணபதி, நந்தகோபன் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் கணபதி, மகளிரணி பொருளாளர் வாசுகி, பொறியாளர் அணி துணை செயலாளர் மோகன்குமார், தலைமை கழக பேச்சாளர் குமார் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் கற்பகம் கந்தசாமி, வேலாயுதம், நகர செயலாளர்கள் சங்கர், ஷேக் உசேன், சாமிதுரை வசந்தகுமார், பேரூர் செயலாளர்கள். கோவிந்தராஜ், ராஜா, கணேசன், நேரு, விஜயகுமார், கானா தமிழ்செல்வி, வெங்கடேசன், காதர்கான், செல்வகுமார், தினகரன், பாஸ்கர், அசோக் மற்றும் மாவட்ட, நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக