திருமயம் அருகே நெய் வாசலில் திட்டாணி கருப்பர் கோயில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு, மாட்டு வண்டி எல்கைப்பந்தயம்!!
திருமயம் ஒன்றியம் நெய்வாசலில் திட்டாணி கருப்பர் கோயில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு, மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் ஆகியவை நடந்த து. பெரிய கண்மாயில் தொழுவம் அமைத்திருந்தனர். அதில் 125 காளைகள் அடைக்கப்பட்டு ஒவ்வொன்றாக களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றைமாடு பிடி வீரர்கள் விரட்டிப்பிடத்தனர். புதுகை,சிவகங் கை மாவட்டங்களைச்சேர்ந்த திரளான மக்கள் மஞ்சுவிரட்டை பார்த்து ரசித்தனர். திருமயம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்நிலையில் 17/02/26 அன்று காலை நெய்வாசல்_ மஞ்சினிப்பட்டி சாலையில் மாட்டுவண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது. அதில் பெரிய மாட்டு வண்டியில் 9 வண்டிகளும்,சிறிய மாடுகளுக்கான பிரிவில் 19 வண்டிகளும் பங்கேற்றன. வெற்றி பெற்றமாடுகளின் உரிமையாளர்கள்,சாரதிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.அதற்கான ஏற்பாடுகளை பந்தயக்குழுவினர் செய்திருத்தனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்


கருத்துகள்
கருத்துரையிடுக