இந்தியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் – அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!!
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு,
அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிகப்படியான எண்ணெயை இறக்குமதி செய்ய இந்தியா சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்!
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் படி,
அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 0% ஆக குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, இந்தியப் பொருட்களுக்கான வரியை 25% இலிருந்து 18% ஆக குறைக்க அமெரிக்கா சம்மதித்துள்ளது.
கூடுதலாக, அமெரிக்க எண்ணெய் கொள்முதலை அதிகரிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக