காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம்: வைகோ கிண்டல்!!
மதிமுக பொதுச் செயலாளர். வைகோ மதுரையில் அளித்த பேட்டி: "காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மிகக் கடுமையாகப் பேசுகிறார். நாங்களும் திருப்பி அடிப்போம் என்று அவர் பேசுவது, ராமநாதபுரத்தில் 2 பேர் சண்டை போட்டுக் கொண்டால் எப்படி பேசுவார்களோ அதுபோல் பேசுகிறார்.
காங்கிரஸ் கட்சி தொடங்கிய நாள் முதல் கலகக்குரல் எழுப்புவது அவர்களது வழக்கம். உட்கட்சி விவகாரத்தில் கதர் சட்டைகள் எல்லாம் கிழிக்கப்பட்டிருக்கும். இது ஒன்றும் புதிதல்ல.
காங்கிரஸ் கட்சியினர் சொல்வதை எல்லாம் திமுக பொருட்படுத்தவில்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை. காங்கிரஸ்காரர்கள் ஒரே நேரத்தில் ஒன்பது குரல் கொடுப்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது."
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக