புதுக்கோட்டையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியும், தாரா மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்!!
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக், மேல்நிலைப் பள்ளியும் தாரா மருத்தவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியது.ஸ்ரீவெங்டேஸ்வராமெட்ரிக். மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் இயக்குனர் ரா. சுதர்சன் முன்னிலை வகித்தார். தாரா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் தனசேகரன் மருத்துவ முகாமைத் துவக்கி வைத்தார். அவர் பேசும்போது” போதுத்தேர்வை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் மாணவர்களுக்கு கல்வியோடு உடல் ஆரோக்கியமும் நலமாக இருக்க வேண்டும். மாணவர்களின் மீதான அக்கறையோடு பள்ளியின் முதல்வர் இந்த முகாமை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நல்லமுறையில் தேர்வெழுதி எதிர்காலத்தில் மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறைகளில் சிறந்து விளங்க வேண்டும்.” என்று வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் ரோட்டரி மண்டல ஆளுனர் ராமையா, பேராசிரியர் கருப்பையா, மகாத்மா ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த முகாமில் மருத்துவர்கள் ராஷ்மி, கிஷோர் ராஜா, நவீன் செல்வம்,சினேகா, அரவிந்த், சண்முகப்பிரியா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்த இலவச மருத்துவ முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து பயனடைந்தார்கள்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக