குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் . விவசாய பிரதிநிதிகள் புலம்பல்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார் வேளாண்மை துறை உதவி இயக்குனர். உமாசங்கர் முன்னிலை வகித்தார் 

கூட்டத்தில் விவசாயிகள். சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். 

இதில் . கோட்ட. அளவிலான விவசாயிகள் . குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு அதிகாரிகள் வருவதில்லை விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர். 

இதில் அகரஞ்சேரி .கூத்தம் பாக்கம். உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பனை மரங்கள் பட்டு போய் விடுகிறது அதை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

அக்ரஹாரம் ஏரி பட்டறை சாலைகளை சீரமைக்க வேண்டும் 

அக்ரஹாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள் அப்பள்ளிக்கு சுற்று. சுவர்  இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பேரணாம்பட்டு ஏரி தூர்வார வேண்டும் அரவட்லா. ஏரி கால் வாயை தூர் எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் 

இதில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர்

செல்வி . சுபலட்சுமி .2. ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்து . இன்று.3.ம் ஆண்டு  . பணி ஆரம்ப தினத்தை முன்னிட்டு விவசாய சங்கம் சார்பாக பொன்னாடை அணிவித்து பாராட்டுதல் தெரிவித்தனர்

இந்நிகழ்ச்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி 

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா. வனத்துறை அலுவலர் திருநாவுக்கரசு. உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் சம்பத் நாயுடு சாமிநாதன் துரை செல்வம் சேகர் பழனிவேலன் சுப்பிரமணி ஏசி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் 

இறுதியில் நேர்முக உதவியாளர். ரமேஷ் நன்றி கூறினார்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேபி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!