செந்துறையில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள செந்துறை சந்தைப் பேட்டையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் 

பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படை உரிமைகள் குறித்து அறிவிப்பு செய்யாத ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு  ஒன்றியத் தலைவர். ரத்தினக்குமார் தலைமை தாங்கினார். செயலர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலர் பகத்சிங் கலந்து கொண்டு ஒன்றிய பட்ஜெட்டில் மாற்றுத்திறனா ளிகளுக்கு சாதகமான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை குறைத்தது, மாற்றுத் திறனாளிகள் சட்டத்தை அமல்படுத்திடவும்,நாடு முழுவதும் தடையற்ற சூழலை ஏற்படுத்திடவும் நிதி ஒதுக்காதது, வேலை வாய்ப்பு வழங்காமலும், உதவித் தொகையினை உயர்த்தாமல் மாற்றுத் திறனாளிகளை புறக்கணித்ததாக கூறி ஒன்றிய அரசைக் கண்டித்து பேசினார். தொடர்ந்து  கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் சுகாதகர், கருப்பசாமி, சின்னையா உள்ளிட்ட சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!