பனப்பாக்கம் துலுக்கானம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பனப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ வரசித்தி விநாயகர், பாலமுருகன், துலுக்கானம் மாரியம்மன், கோயில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேம் நடைபெற்றது. முன்னதாக மங்கள இசை, நான்காம் கால யாகசாலை பூஜை ஆரம்பம், பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், நாடிசந்தனம், தத்துவார்சனை, பிரசாஹுதி மஹா பூர்ணாஹுதி தீபாராதனை யாத்ராதானம், நடைபெற்ற யாகசாலையில் இருந்து கடை புறப்பாடாகி விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மஹா தீபாராதனை மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொழிலதிபர் பனப்பாக்கம் குமார் ரெட்டியார், திருப்பணி கமிட்டி குழுவினர்கள் மற்றும் கிராமவாசிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக