தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்க மாநில தலைவர் பி. ஜெ. ரவிக்குமார் பதவி ஏற்கும் விழா!!


தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில தலைவராக திரு. பி.ஜெ. ரவிக்குமார் அவர்கள் பதவி ஏற்கும் விழா வருகின்ற 28.02.2026 (சனிக்கிழமை) காலை 10.00 மணியளவில், சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள ஹோட்டல் கிங்ஸ் தாமரை ஹால்-ல் சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்விழாவினை தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கம் சார்பில் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் சங்கத்தின் தாய் அமைப்பான தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்-ன் மாநில தலைவர், மற்றும் மாநில தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி விழாவை சிறப்பிக்க உள்ளனர்.

 மேலும், சங்கத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி  இவ்விழாவை வெற்றிகரமாக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்க மாநில மையம், சென்னை–8 சார்பில் அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது சங்க நிர்வாகிகள் அனைவரும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!