நத்தம் திருமலைக்கேணியில் நடைபெற்ற தேய்பிறை சஷ்டி விழா!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை மாத தேய்பிறை சஷ்டி பூஜை விழா நடந்தது. இதையொட்டி முருக பெருமானுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர்,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. மேலும் அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுவட்டாரங்களிலிருந்து திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல் வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில்,நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி, குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயில் முருகப்பெருமான் சன்னதியிலும் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக