குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம். அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். கே. சாமிநாதன் தலைமை தாங்கினார்.
இதில். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யா கோடீஸ்வரன் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர்.கே.சரவணன், சின்னாளப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர். என். பாபு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர். வசந்தி ரமேஷ், ஆசிரியர். ஜி. தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர். ஜோதி பாஸ்கரன் வரற்புரையாற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர். சி. ஏ. ஏகாம்பரம் . 72 மாணவ, மாணவிகளுக்கு . விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.மற்றும். வழக்கறிஞர். சி. தண்டபாணி முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் டெய்லர். பி சரவணன். பவானி மேகநாதன், பழனி, கோ. வெங்கடேசன், சி. தசரதன், ரா. உலகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இறுதியில் உதவி தலைமை ஆசிரியர். கிஷோர் குமார் நன்றி உரை கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக