சுற்றறிக்கை!!

மதுரையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்  மேம்பாலம்” என்று பெயர் சூட்டியுள்ளதாக மாண்புமிகு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அகில இந்திய பார்வட் பிளாக் கட்சியின் கட்சியின்  கோரிக்கையை ஏற்று, வங்கத்தின் சிங்கம் நேதாஜி அவர்களின் பெயரை சூட்டிய தமிழக அரசின் முடிவை மனமார வரவேற்கிறறோம். வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழியாத தடம் பதித்த மகத்தான தேசத் தலைவர். அவருடைய தியாகம், தன்னம்பிக்கை மற்றும் தேசப்பற்று இன்றைய தலைமுறைக்கும் பேருத்வேகமாக உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரையில், தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிலை அமைந்துள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பெயர் சூட்டப்படுவது இந்திய நாட்டின் சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் நிகழ்வாகும். டாக்டர் பி.வி. கதிரவன் Ex. M.L.A. தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் அகில இந்திய துணைத் தலைவர். அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!