புதுக்கோட்டை ஏவிசிசி கல்விக் குழுமத்தில் நடைபெற்ற மரம் வளர்ப்பதை வலியுறுத்தி மழலைக் குழந்தைகளின் வித்தியாசமான விளையாட்டுப் போட்டி!!

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் இயங்கி வரும் ஏவிசிசி கல்விக் குழுமத்தில் மழலையர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் புதுக்கோட்டை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளா். பிருந்தா IPS அவர்கள் தலைமையில் ஆதிசாய் ஐஏஎஸ் அகாடமியின் தலைவர். ஏவிசிசி கணேசன், பள்ளியின் தாளாளர். மல்லிகா கணேசன் முன்னிலையில் நடைபெற்றது.

இப்போட்டிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக அரசு மகளிர் கல்லூரி முதல்வர். நிர்மலா மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர். செந்தில்குமார் கலந்து கொண்டனர்.மக்கள் அனைவரும் மரம் வளர்க்க வேண்டும் என்கிற பொதுநல விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்கள் நடத்திய அணிவகுப்பு பேரணி உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை பெற்றோ்களும், பொதுமக்களும் மிகவும் ஆர்வத்துடன் கண்டு களித்து பாராட்டினர்.

வெற்றியாளர்களுக்கு பதக்கம் அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!