பண்ருட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நல்லொழுக்க பயிற்சி!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நல்லொழுக்க பயிற்சி மாவட்ட செயலாளர். அப்துல் வஹாப் தலைமையில் நடைபெற்றது. ஆண், பெண் பேச்சாளர்கள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு தேவையான பல்வேறு நல்லொழுக்க பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.
தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் அப்துல் நாசர் " பிள்ளைகள் வளர்ப்பும் பெற்றோர்கள் பொறுப்பும்" என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முஸ்லிம்களுக்கான உள் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும். 20 ஆண்டுகளைக் கடந்த முஸ்லிம் சிறைவாசிகளை, மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் போன்றவை குறித்து வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அப்துல் காதர், உபைதுல்லாஹ், முகமது சலீம், நூர் முஹம்மது, கமாலுதீன் இப்ராஹிம், ஷபீர் அஹமது, ரிஜ்வான், உமர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிளை தலைவர் முகமது சலீம் நன்றி கூறினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக