திண்டுக்கல்–குமுளி நான்கு வழிச்சாலை சர்வேப் பணிகள் துவக்கம்!!
திண்டுக்கல்–குமுளி தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது.
இதற்காக 2010 ஆம் ஆண்டு முதல் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை திட்டமிடப்பட்ட நிலையில், அதில் தேனி மாவட்டத்தில் மட்டும் சுமார் 91 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ளது.
கெங்குவார்பட்டி முதல் கீழக்கூடலூர் வரை தேனி மாவட்டத்தில் உள்ள 28 வருவாய் கிராமங்களில் நிலம் எடுப்புப் பணிகள் துவங்கின. இந்த சாலையில் வீரபாண்டி, தேனி, பெரியகுளம், தேவதானப்பட்டி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருவதால், நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், திண்டுக்கல்–குமுளி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது சர்வே பணிகளை துவக்கியுள்ளது.
சர்வே பணிகளின் போது சாலை வளைவுகள், விபத்து ஏற்படும் பகுதிகள், வாகன போக்குவரத்து எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் கணக்கிடப்பட உள்ளன.
சர்வே பணி முடிந்த பின், அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக