கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற மனித கடத்தல் எதிர்ப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் அருகே காட்டாண்டிகுப்பம் முந்திரி தொழிற்சாலையில், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதி.சுபத்ராதேவி வழிகாட்டுதலின்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், மூத்த உரிமையியல் நீதிமன்ற நீதிபதி. ஜெனிதா தலைமையில் மனித கடத்தல் எதிர்ப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வழக்கறிஞர். விமல் ராஜ், முந்திரி தொழிற்சாலை உரிமையாளர். ராமசாமி கருப்பையா, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர். மகேஸ்வரன், உதவி ஆய்வாளர்கள். பத்மா, விஜயலட்சுமி, கடலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர். ரேவதி, மாவட்ட நிதிக்கல்வி அலுவலர் டாக்டர். அருண் குமார், சமூக ஆர்வலர். ராம்குமார், சட்டத்துறை தன்னார்வலர். அன்பு, இளவரசி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக