திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை  கிளையில் இன்று நீதி அரசர் ஜிஆர் சுவாமிநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜராக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் , மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் மதுரை மாநகர் தெற்கு காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன்  கோவில் இணை ஆணையர் யக்ஞ நாராயணன்  உள்ளிட்டோர் ஆஜராயினர்.

இதில் ஆஜரான மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நிபந்தனையற்ற  மன்னிப்பு கோருகிறேன் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி அடுத்த விசாரணையின் போது மாவட்ட ஆட்சியர் மட்டும் ஆஜராக வேண்டும்.  காவல் ஆணையர், துணை ஆணையர், செயல் அலுவலர் ஆஜராகத் தேவையில்லை இன்று உத்தரவிட்டு அடுத்த கட்ட விசாரணையை மார்ச் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்தார்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!