வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு BLA-2, BDA, BLC பயிற்சி மாநாட்டில் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர். பெ. வடிவேலு தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு!!



ராணிப்பேட்டை மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு BLA-2, BDA, BLC பயிற்சி மாநாடு திருப்பத்தூர் நகரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், ஆர்.காந்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி, இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி, நெமிலி கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் BLA-2, BDA, BLC நிர்வாகிகள் அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்ள, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி, தமிழ்நாடு தலைகுனியாது, ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற கோஷங்களை எழுப்பி புறப்பட்டுச் சென்றனர்.


அப்போது நெமிலி பேரூர் கழக செயலாளர். ஜனார்த்தன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு, நிர்வாகிகள் அவைத்தலைவர். புருஷோத்தமன், துணை செயலாளர். முகம்மது அப்துல் ரகுமான், பாண்டியன், மாவட்ட பிரதிநிதி. விநாயகம், சேகர் பசுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!