பேரறிஞர் அண்ணாவின் 57ஆம் ஆண்டு நினைவு தினம்!திட்டக்குடியில் திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
கடலூர் மாவட்டம்,பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர். சி.வே. கணேசன் அவர்களின் ஆணைக்கிணங்க, திட்டக்குடி நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனடிப்படையில், திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வதிஷ்டபுரத்தில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பழைய பேரூராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் மற்றொரு திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, பேரறிஞர் அண்ணாவின் சமூக நீதி, சுயமரியாதை, தமிழ் மொழி வளர்ச்சி குறித்த கொள்கைகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக