கோவையில் திருச்செந்தூர் திருமுருகன் இறைவழிபாடு மன்றம் 52வது ஆண்டு தைப்பூசத் திருவிழா தொடங்கியது!108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடு!!
கோவையில் திருச்செந்தூர் திருமுருகன் இறை வழிபாடு மன்றத்தின் 52வது ஆண்டு தைப்பூசத் திருவிழா 3 நாட்கள் கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் வெகு விமர்ச்சியாக நடைபெறுகிறது. இதில் முதல் நாள் நிகழ்வாக முருக பெருமானுக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் இசை அமுதம் ஆர்கெஸ்ட்ரா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் திருச்செந்தூர் திருமுருகன் இறை வழிபாடு மன்றத்தின் 52வது ஆண்டு தைப்பூசத் திருவிழா 3 நாட்கள் வெகு விமர்ச்சியாக நடைபெறுகிறது. இதற்கு குருடம்பாளையம் ஊராட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரும், திருச்செந்தூர் திருமுருகன் இறை வழிபாடு மன்றத்தின் தலைவரும், அருள்மிகு விருந்தீஸ்வரர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவருமான பி.வி.மணி தலைமை வகித்தார்.
இந்த விழாவிற்கான அனைத்து பூஜைகளையும் விருந்தீஸ்வரர் கோயில் தயாநிதி குருக்கள் செய்தார். முதல் நாள் விழாவில் விநாயகப் பெருமானுக்கு தீபாராதனையுடன் தொடங்கி முருக பெருமாருக்கு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 108 பெண்கள் கலந்துக்கொண்ட திருவிளக்கு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நவ் ஹிந்துஸ்தான் ஸ்பின்னர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சாந்தி செல்வராஜ் தலைமை தாங்கி குத்துவிளக்கை ஏற்றி வைத்தார். திருவிளக்கு வழிபாட்டை பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் ஞானமூர்த்தி ஓதுவார், சிவக்கொழுந்து ஓதுவார் நடத்தி வைத்தனர்.
வரும் சனிக்கிழமை மாலை சிவபெருமானுக்கு தீபாரதணை நடைபெறவுள்ளது. தொடர்ந்து மனித வாழ்வின் நிலைத்த மகிழ்ச்சிக்கு பெரிதும் தேவை சொத்துபத்துக்களா, சொந்தபந்தங்களா என்ற தலைப்பில் இன்னிசை பாட்டு மன்றம் நடைபெறுகிறது.
ஞயிற்றுக்கிழமை காலை முருக பெருமானுக்கு அபிசேக ஆராதனையும், அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் நடைபெறுகிறது.
முதல் நாள் நிகழ்வின் இறுதியாக எஸ் வி எஸ் வசந்தகுமார் ஏற்பாட்டில் இசை அமுதம் ஆர்கெஸ்ட்ரா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அருள்மிகு விருந்தீஸ்வரர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவருமான பி.வி.மணி, திமுக ஒன்றியச் செயலாளர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், அம்சவேனி பழனிச்சாமி, , வி.பி.சண்முகம், சூரியா வெள்ளியங்கிரி, எல்.எம்.டபுள்யூ அசோகன், தம்பி பார்த்திபன், அன்னதான கமிட்டியினர், அன்புக்குமார் மற்றும் சண்முகசுந்தரம், பி.வி.செல்வராஜ், வேல்முருகன், கதிர்வேல், வேலுச்சாமி, தனசேகர், சுந்தரம், பழனிச்சாமி, ராமசந்திரன், மெய்யழகன், டெக்சன் ராஜன், செளந்திரராஜன், பூபதி, வெள்ளகிணர் செல்வகுமார், ஜோதிமணி, விவீன், மோகனசுந்தரம், தணிக்கைசெல்வன், ரவிச்சந்திரன், சுரேஷ், பாபு, காளிதாஸ், பரமசிவம், பி.டி.மோகன்ராஜ், எல்.எம்.டப்ள்யூ சிவகுமார், மணிகண்டன், சரவணகுமார் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.









கருத்துகள்
கருத்துரையிடுக