நெமிலியில் முதலமைச்சரின் மகளிர் உரிமைத் தொகை ரூ. 5000 வழங்குவதை முன்னிட்டு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிய ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு!!


ராணிப்பேட்டை மாவட்டம், தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத்தொகை  பெற்று வருபவர்களுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் உள்ளிட்ட 3 மாதங்களுக்கு முன்பணமாக ரூ.3 ஆயிரமும், கோடைகால சிறப்பு தொகுப்பாக ரூ.2 ஆயிரமும் மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் நேற்று காலை முதல் அரசு சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து நெமிலி பேருந்து நிலையத்தில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் நகர திமுக சார்பில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்‌கினர். 

அப்போது நகர செயலாளர். ஜனார்த்தனன், நகர வர்த்தக அணி அமைப்பாளர். ராகேஷ்ஜெயின், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணன், சேகர், ஒன்றிய துணை செயலாளர். முகமது அப்துல் ரகுமான், கோபி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!