தேனி: 50 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்ப்பு!!

 

தேனி மாவட்டம்,தேவாரம் பகுதியில் 50 ஆண்டுகளாக வளர்த்து வந்த 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை மர்ம நபர்கள் இயந்திரம் மூலம் வெட்டி சாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவாரம் செட்டிகுளம் கண்மாய் அருகே தென்னை விவசாயம் செய்து வரும் சேகர் என்ற விவசாயி, தனது தோட்டத்தை ஒட்டிய பகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக 60க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அவர் தோட்டத்திற்கு சென்றபோது, மர்ம நபர்கள் இயந்திரம் மூலம் தென்னை மரங்களை வெட்டி சாய்த்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர்களைப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைக்க முயன்றபோது, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகள் உழைப்பில் வளர்த்த மரங்கள் வெட்டப்பட்டதை கண்டு மனவேதனை அடைந்த விவசாயி சேகர், உடனடியாக தேவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

50 ஆண்டுகளாக வளர்த்து வந்த தென்னை மரங்கள் வெட்டப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!