கோபால்பட்டியில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு!!

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கோபால்பட்டி அடுத்துள்ள அய்யாபட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (36).இவர் கோபால்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் கடந்த 5 வருடங்களாக வேளாண் சம்பந்தப்பட்ட கருவிகள் விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல் 7 மணியளவில் வியாபாரம் முடித்துக் கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். 

பின்னர் சனிக்கிழமை காலை 9 மணி அளவில் கடையை திறக்க வந்தார்.அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதைத்தொடர்ந்து அவர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு கல்லாவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.30 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.இதையடுத்து யாரோ மர்ம நபர் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து சுரேஷ் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் சாணார்பட்டி காவல் ஆய்வாளர். பிரபாகரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.விசாணையில் அதே பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடை,பலசரக்கு கடை உள்ளிட்ட 4 கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது.

மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் கடைக்கு வருகிறார் பின்னர் சாலையில் யாரும் வருகிறார்களா என்பதை நோட்டமிடுகிறார். 

பின்னர் அவர் கொண்டு வந்திருந்த இரும்பு கம்பி மூலம் பூட்டை உடைத்து கடையின் உள்ளே சென்று பணம் திருடும் காட்சி பதிவாகி இருந்தது.அதனைத் தொடர்ந்து கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற அந்த மர்ம நபரை போலீஸார்  தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!