குடியாத்தம் காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய போக்சோ குற்றவாளி 45 மணி நேரத்தில் அதிரடியாக கைது!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில். தங்கம் நகர் பகுதிய சேர்ந்த கமலேஷ் .வயது.24 என்பவரை கடந்த 14ஆம் தேதி போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
இவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் . ஆஜர் படுத்த தேவையான ஆவணங்களை போலீசார் தயார் செய்து கொண்டிருந்த நிலையில். அன்று இரவு உணவு வழங்க காவல் நிலையத்தில் உள்ள கைதி அறையிலிருந்து . கமலேஷை. வெளியே . அழைத்து வந்தனர் அப்போது திடீரென்று காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி விட்டான். இது சம்பந்தமாக. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் . உத்தரவின் பேரில்.3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர் .
இந்நிலையில் தப்பி ஓடிய கமலேஷ் கர்நாடகா மாநிலம் பெங்களூர் அடுத்த கே ஆர் புரம் பகுதியில் இருப்பதாக செல்போனில் அவரது தாயாருக்கு தெரிவித்தார். இது சம்பந்தமாக. போலீசார் அவரது தாயாரிடம் தொடர்பு கொண்டு. பேசிய செல்போன் நம்பரை வைத்து கமலேஷ் உள்ள இடத்தை ஆய்வு செய்த போது கே ஆர் புறம் பகுதியில் ஒரு ஹோட்டலில் பதுங்கி இருந்ததாக தெரிய வந்தது. இதைய டுத்து அங்கிருந்த . கமலேஷ் சை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து கமலேசியிடம் . தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய . கமலேஷை 45 மணி நேரத்தில் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக