குடியாத்தத்தில் 400 ஆண்டுகள் பழமையான சீவூர் ஸ்ரீ காளியம்மன் கோவில் தேர் திருவிழா!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் உள்ளது இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருத்தேர் திருவிழா நடைபெறும், இதனிடையே இந்த ஆண்டு இன்று திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஊர் மக்கள் பொங்கலிட்டும் கூல் வார்த்தும் பூகரகம் எடுத்து காளி அம்மனை வழிபட்டனர்.
மேலும் இன்று காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் சீவூர் கிராமத்தின் முக்கிய வழியாக சென்றது அப்போது வழிநெடுகிலும் ஆடுகள் கோழிகள் பலியிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் நாட்டுப்புற இசை மேளதாளங்களுடன் சிலம்பாட்டம் தப்பாட்டம் மானாட்டம் போன்ற பழமையான கலைகளுடன் தேர் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.ஸநிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர் முக்கிய பிரமுகர்கள் இளைஞர்கள் ஏற்பாடு செய்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக