திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்களுக்கு நடைபெற்ற புலனாய்வு சம்பந்தமாக 4 நாட்கள் சிறப்பு புத்தாக்க பயிற்சி!!
திருநெல்வேலி மாவட்டம்,திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், மாவட்டத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்களுக்கு, புலனாய்வு சம்பந்தமாக 4 நாட்கள் சிறப்பு புத்தாக்க பயிற்சி வகுப்பு இன்று (06.02.2026) தொடங்கியது.
இப்பயிற்சியில், திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் என மொத்தம் 50 நபர்கள் கலந்து கொண்டனர்.
இந்த புத்தாக்க பயிற்சியானது, காவல்துறையினரின் புலனாய்வு பணிகளில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வண்ணம், புதிதாக அமல்படுத்தப்பட்ட சட்டப்பிரிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ், சந்தேக மரண வழக்குகள், மதுவிலக்கு வழக்குகள், சிறு காயம் மற்றும் கொடுங்காய வழக்குகள், விபத்து வழக்குகள் ஆகியவற்றின் புலன் விசாரணையினை மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளை திருநெல்வேலி மாவட்ட காவல் ஆய்வாளர்கள் நடத்த உள்ளனர்.
மேலும், பயிற்சி நடக்கும் மையத்திற்கு வருகை தந்த திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. ப. சரவணன், இ.கா.ப., அவர்கள், பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடி, பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கினார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக