மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றிய ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர்: 3 நபர்களுக்குப் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன!!
ஆற்காடு இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கில், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் சிறப்பு முயற்சியை மேற்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (20225-26), ஒரு வாகனத்திற்கு தலா ரூ. 1,01,800 வீதம், மொத்தம் மூன்று பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட நவீன பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அவர்களின் நிர்வாக அனுமதியின்படி முறைப்படியான அரசாணையைப் பின்பற்றி இந்த நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் நேரடி மேற்பார்வையில், தரமான வாகனங்கள் தேர்வு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வழங்க உறுதி செய்யப்பட்டது.
இச்சிறப்புத் திட்டத்தின் கீழ் ஆற்காடு தொகுதியைச் சேர்ந்த பின்வரும் மூன்று பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களது வாழ்வாதாரப் பயணம் எளிதாக்கப்பட்டுள்ளது: கே.வேலூர், குமரவேல், சின்ன குக்குண்டி, திருவேங்கடம், தந்தை பெரியார் தெரு, ஆற்காடு ராஜீவ்காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து உரிய முறையில் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன. இதற்கான ஒப்புகை ரசீதுகள் மற்றும் காசோலை பரிமாற்றங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தின் மூலம் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் இந்த விரைவான நடவடிக்கை மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்


கருத்துகள்
கருத்துரையிடுக