ஆலங்குடியில் 33 வாரங்களில் பிறந்த பெண் குழந்தை அண்ணா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையால் நலம் பெற்றது!!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அண்ணா மருத்துவமனையில் கடந்த 8ஆம் தேதி விக்னேஷ் மனைவி ஸ்ரீ பிரீத்தி வயது (27) இவருக்கு கடந்த 8ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு ஆலங்குடி அண்ணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் மருத்துவமனையில் டாக்டர் ராஷ்மி, டாக்டர் சதீஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர் பின்னர் அன்று மாலை 4 மணியளவில் குறை மாதம்( 33) வாரங்களுக்களே ஆன நிலையில் 1.5 கிலோ எடை கொண்ட பெண் குழந்தை பிறந்தது உடனே மருத்துவ குழுவினர் குழந்தையினை பரிசோதித்து குழந்தைக்கு நுரையீரல் மற்றும் உடல் வளர்ச்சி குறைவாக இருப்பதை அறிந்து அதே அண்ணா மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதித்து குழந்தைக்கு மூச்சு குழாய் வழியாக மருந்து செலுத்தி செயற்கை சுவாசம் அளித்து பல்வேறு சோதனைகள் செய்து சிகிச்சை அளித்து வந்தனர். 14நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் குழந்தை உடல் நலம் முன்னேற்றம் அடைந்தது பின்னர் குழந்தையும், தாயும் மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு சென்றனர் .இதுபோன்ற அதி நவீன சிகிச்சை சென்னை மதுரை திருச்சி போன்ற இடங்களையும் தாண்டி ஆலங்குடியிலும் குழந்தைகளுக்கு சிறந்த சிகிச்சை பெறலாம் என்பதனை பெற்றோர்கள் கண்ணீர் மல்க எனது குழந்தையை காப்பாற்றிய மருத்துவர் ராஷ்மி, டாக்டர் சதீஷ் மற்றும் செவிலியர்கள் ஆகியோரை மனதார வாழ்த்தினார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக