டப்பா என்ஜின், ஓட்ட என்ஜின் என எந்த எத்தனை என்ஜின் வந்தாலும் டாப் என்ஜின் தவெகதான் - தவெக 3 ஆம் ஆண்டுத் தொடக்க விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு!!
பவள விழா பாப்பாவுக்கு வேறு என்ன தெரியும்?; பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும். அதற்காக அவர்கள் செய்யும் தவறை சொல்லாமல் இருக்க முடியுமா? சொல்லிக்கொண்டே இருப்போம். மக்களின் ஒரே பிரதிநிதி நாம் மட்டும்தான்; நாம்தானே அவர்களை கேள்வி கேட்க முடியும்.
“அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு” என திருவள்ளுவர் இன்று இருந்திருந்தால் திருக்குறள் எழுதியிருப்பார். டப்பா இன்ஜின், ஓட்ட இன்ஜின் என எத்தனை இன்ஜின் வந்தாலும்... டாப் இன்ஜின் தவெகதான். மாபெரும் மக்கள் சக்தியாக நமது அணி ஒருபக்கம்; அடுத்து திமுக தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகள் ஒருபக்கம்; அடுத்து பாஜக தலைமையில் மற்றும் பலர் இப்படி எத்தனை சக்திகள்... எத்தனை கட்சிகள் வந்தாலும் திமுகவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான நம்மால்தான் முடியும்-தவெக தலைவர். விஜய்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக