குடியாத்தத்தில் உள்ள நெல்லூர் பேட்டை பெரிய ஏரியில். சுமார் 2 அடி உயரம் உள்ள அம்மன் சிலை கண்டெடுப்பு!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பெரிய . ஏரியில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் அம்மன் சிலை இருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவாய்த்துறையினர் சென்றனர். அங்கு பொதுமக்கள் ஏரியில் உள்ள அம்மன் சிலையை மீட்டு சிலையை கழுவி மஞ்சள் குங்குமிட்டு மாலை அணிவித்து வழிபட்டனர். பின்பு சிலையை. வட்டாட்சியர். கே பழனி. அவர்களிடம் ஒப்படைத்தனர். உடன் மேற்கு வருவாய் ஆய்வாளர். செந்தில், நெல்லூர் பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சபரிமலை ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக