இராணிப்பேட்டை மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகர்வோர்கள் மற்றும் விநியோகிக்கும் முகவர்கள் குறைதீர் கூட்டம் வரும் 27.02.2026 மாலை 03.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இராணிப்பேட்டை மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகர்வோர்கள் மற்றும் விநியோகிக்கும் முகவர்கள் குறைதீர் கூட்டம் வரும் 27.02.2026 மாலை 03.00 மணி அளவில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இம்மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்படும் சேவை குறைபாடுகள், தேவைகள் குறித்து ஆலோசித்து குறைகளைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே பிப்ரவரி மாதத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 27.02.2026 அன்று மாலை 03.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளதால் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு சேவை குறைபாடுகள்/புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக