நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 250ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துகுமாரசாமி திருக்கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா!!
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த பாப்பம்பாளையத்தில் 250 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துகுமாரசாமி திருக்கோயிலானது அமைந்துள்ளது. கேட்கும் வரம் அருளும் இக்கோயிலானது சில வருடங்களுக்கு முன்னர் சிதலமடைந்ததையடுத்து இந்து அறநிலையத்துறையின் அனுமதி பெற்று புதிய கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததையடுத்து கடந்த. 4ம் தேதி பந்தக்கால் போடப்பட்டது. தொடர்ந்து விநாயகர் பூஜை, அஷ்ட மஹா லட்சுமி யாகம், நவக்கிரக யாகம் பூர்ணாஹீதி, மஹா தீபாரதனை காப்பு கட்டுதல் முளைப்பாலிகை அழைத்தல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மஹா கும்பாபிஷேக விழாவானது இன்று நடைபெற்றது.
மற்ற கோயில்களில் இல்லாதவாறு முருகன் முன்னோக்கி செல்வது போல இங்கு திருவுருவ சிலையானது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 35அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்டு அஸ்திவாரம் போடப்பட்டு முழுவதும் கருங்கற்களை கொண்டு புதிய தொழில்நுட்பத்துடன் கோயில் கட்டப்பட்டுள்ளதால் ஆமிரம் வருடங்கள் ஆனாலும் அழியாது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பள்ளிபாளையம், பாப்பம்பாளையம் ஓடத்துறை கொக்கராயன்பேட்டை வெண்டிபாளையம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசணம் செய்தனர்.
ஈரோடு மாவட்ட செய்தியாளர் சுந்தரம்.



கருத்துகள்
கருத்துரையிடுக